நடிகர் விஜயகாந்த் என்பதை தாண்டி கேப்டன் விஜயகாந்த் என்று சொல்ல தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அரசியலில் சிறுகாலத்திலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு தனது கட்சியை வழிநடத்தி வந்தார் விஜயகாந்த். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படியே வீட்டில் முடங்கினார்.
சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் இன்று காலை 28 ஆம் தேதி டிசம்பர் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மூச்சு விடுவதில் சிரமம், கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 71 வயதில் காலமானார்.
இச்சம்பவம் தேமுதிக கட்சியின் தொண்டர்களையும் விஜயகாந்தின் ரசிகர்கள், பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைதொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் மியாட் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.