சென்னையில் மட்டும் அதை வச்சிக்கலாம்.. நயன்தாராவை கண்டு தெறித்து ஓடும் இயக்குனர்கள்..! லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.
இவர் அண்மையில் நடிகர் ஷாருக்கானோடு இணைந்து நடித்த ஜவான் படம் பாலிவுட் திரை உலகில் சக்கை போடு போட்டது. இதை அடுத்து பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
திருமணம் ஆகி வாடகை தாயின் மூலம் பிள்ளை பெற்றுக்கொண்ட நயன்தாரா சமீப காலமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் நயன்தாரா கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத போதும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் 10 கோடி அளவு சம்பளம் வாங்கி வருகிறார்.
இதனால் ஒரு படத்தின் பட்ஜெட் தொகையின் பெரும் பகுதி அவருடைய சம்பளமாக செல்கிறது. அதைத் தாண்டி இன்னும் பல இடஞ்சல்களை தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா தற்போது கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
அதாவது நடிக்க கமிட் ஆகி இருக்கும் படங்களின் ஷூட்டிங் சென்னையில் மட்டுமே நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவருடைய குழந்தைகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் சென்னையில் மட்டுமே ஷூட்டிங் என்ற ஆர்டரை போட்டு வருகிறாராம்.
வேறு ஏதேனும் லொகேஷனுக்கு சென்று காட்சிகளை எடுக்க வேண்டும் என்று சொன்னால், அந்த செட்டை சென்னையில் போடுங்கள் என்று கூறுகிறார். இவருக்கு 10 கோடி சம்பளம் கொடுப்பது போதாது என்று சென்னையில் இது போல செட்டுகளைப் போட கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டுமா? என்று மண்டையை தயாரிப்பாளர்கள் பிய்த்துக் கொள்கிறார்கள்.
மேலும் ஷூட்டிங்க்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நடித்து விட்டு உடனே வீட்டுக்குப் போக வேண்டும் என்று பேக்கப்பும் செய்து விடுகிறார். 10 பேர் கூட வந்து செல்வதால் அவர்களுக்காகவும் செலவுகளையும் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டி உள்ளது.
இது போதாது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பவுன்சர்கள் வேண்டும் என்று அவரது பாதுகாப்பைக்காக என அடம் பிடித்து வருவதால் அதற்கு உரிய செலவையும் யார் செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டு கொள்ள வேண்டும் என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.