சலார் திரைவிமர்சனம் : கே ஜி எப் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்து இவர் என்ன செய்வார், என்ன செய்வார் என்று பிரஷாந்த் நீல் படத்தின் பில்டப் போலவே அவர் அடுத்த படம் எதுர்ப்பார்ப்பு அதிகரிக்க, சலார் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
இரண்டு நண்பர்கள் வரதா, தேவா. இவர்கள் உலகமே தனி, ஊரே தனி என்பது போல் கான்சார் என்ற ஒரு நாட்டில், ஆமாங்க நாடுனே சொன்னலாம், அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
தேவா(பிரபாஸ்) தன் நண்பன் வரதா(பிரித்விராஜ்) ஆக என்ன வேண்டுமானாலும் செய்வார், தன் உயிரை கொடுத்து கூட காப்பாற்றுவார்.
அப்படி பட்ட நட்பு ஒரு கட்டத்தில் பிரிய, வரதா மீண்டும் கான்சாரில் தன் மரியாதை கீழே இறங்க, பிரிந்த நண்பனை மீண்டும் கான்சாருக்கு அழைத்து வர, அங்கு நடக்கும் யுத்தம், ராஜ தந்திரம் கான்சார் யாருக்கு சொந்தம் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பிரபாஸ் மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். தன் உயரத்தை தாண்டிய கம்பீரம், இவர் 1000 பேரை அடித்தால் கூட நம்பலாம் என்று சொல்ல தோனும், அதற்காக 1000 தோட்டக்களையும் இவர் கடந்து வருவது சூப்பர் மேன் தோத்தான்ப்பா.
பிரித்விராஜ் கொஞ்சம் அடக்கி வாசித்து காரியத்தை சாதிக்கும் கேரக்டர் அதை திறம்பட செய்துள்ளார். படத்தின் இரண்டாவது ஹீரோ பிரபாஸ், அப்போ முதல் ஹீரோ பிரித்விராஜா என்றால் அது தான் இல்லை.
அன்பறிவு மாஸ்டர்ஸ் தான், படம் முழுவதும் வெட்டு குத்து அடி தடி என இரத்த ஆறு தான் ஓடுகிறது, ஸ்டெண்ட் பட விரும்பிகளுக்கு ஆடு வெட்டி கோழி கறி வைத்த விருந்து.
ஆனால், இதை தான் கே ஜி எப்-லே பார்த்தாச்சே அப்றம் ஏன் நீல் சார் இதையே போட்டு காட்றீங்க என பல இடங்களில் கேட்க தோன்றுகிறது. அதே ஒளிப்பதிவு, எடிட்டிங் அதை விட நம்மை சில இடங்களில் சோதிக்கும் இசை.
சேம் டெம்ப்ளேட். படத்தின் முதல் பாதி பிரபாஸ் யார் என்ற பில்டப், அதை தொடர்ந்து வரும் இரண்டு சண்டைக்காட்சி என நிமிர்ந்து உட்கார வைக்கிறத்து.
ஆனால், இரண்டாம் பாதி ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருந்தாலும் முதல் பாதியில் இருந்து ஒரு எமோஷ்னல், பெண்களை பிரபாஸ் காப்பாற்ற வரும் ஒரு சண்டை காட்சியில் மட்டுமே இருக்கிறது.
க்ளாப்ஸ்
பிரபாஸின் கம்பீர நடிப்பு.
படத்தின் முதல் பாதி.
சண்டை, சண்டை, சண்டை
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி
ஏகப்பட்ட கதாபாத்திரம் என்பதால் தெளிவு இல்லாமல் பல இடங்களில் செல்கிறது திரைக்கதை.
மொத்தத்தில் பிரஷாந்த் நீல் மேஜிக் பிரபாஸை பாகுபலிக்கு பிறகு காப்பாற்றினாலும், பிரஷாந்த் தன்னை காப்பாற்ற மறந்துவிட்டார் போல.