December 11, 2024
LeoTamil.com
Image default
specials

நடிகர் தனுஷுக்கு விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவி : வெளிவராத உண்மைகள்.!!

நடிகர் தனுஷுக்கு விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவி : வெளிவராத உண்மைகள்.!! எத்தனையோ இயக்குனர்களின் வீடுகளில் விளக்கேற்றி வைத்த மனிதன் இந்த விஜயகாந்த். 80களில் எத்தனையோ நல்ல படங்களை தந்து தமிழனின் வாழ்க்கையில் அழகான பொழுது போக்கு அம்சங்களை தந்தவர்..

நடிகர் தனுஷுக்கு இரு அக்காக்கள். ஒருவர் பல் டாக்டராக இருக்கிறார். ஒருவர் மகப்பேறு மருத்துவராக அப்போலோவில் இருக்கிறார். இந்த அப்போலோ டாக்டர் அக்கா ப்ளஸ்டூவில் கட்ஆஃப் ஒரு மார்க் குறைந்து விட்டாராம்..அதனால் அவரின் மருத்துவர் கனவு கலைந்து போனது..இதை நினைத்து சாப்பிடாமல் அழுது கொண்டிருந்திருக்கிறார்.

கஸ்தூரிராஜா அப்போது சில படங்களை இயக்கிக்கொண்டிருந்திருக்கிறார். விஜய்காந்த் நடித்த வீரம் விளைஞ்ச மண்ணு என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். பெரிய சேமிப்பு இல்லை.

நடிகர், தனுஷுக்கு, விஜயகாந்த், Vijaikanth, dhanush

யதேச்சையாக வீட்டிற்கு வந்த விஜயகாந்த் “பாப்பா ஏன் அழுகுது?” என கேட்டிருக்கிறார்..கஸ்தூரி ராஜா மெடிக்கல் சீட் கிடைக்காத விஷயத்தை சொல்ல “வாங்க..என்னோடு…” என்றிருக்கிறார்.

நேரே ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் நிறுவனர் உடையாரிடம் போயிருக்கிறார்கள். கஸ்தூரிராஜாவோ “வேண்டாங்க பணம் கொடுத்து காலேஜ் சீட் வேணாம்..” என சொல்ல “அப்புறம் எதுக்கு குழந்தைகளை பெக்குறீங்க..” எனச்சொல்லி உடையாரிடம் போய் பேசி இருக்கிறார்.

உள்ளே அழைத்த உடையார் “எவ்வளவு பணம் தருவீங்க?” எனக்கேட்டு 20 லட்சம் சொல்ல கஸ்தூரி ராஜாவோ பத்து சொல்ல கடைசியில் “ஒரு ஸ்கீம் இருக்கு. 17 லட்சம் இப்போ கட்டுங்க. வருடம் 18000 மட்டும் கட்டினால் போதும்” எனச்சொல்லி இருக்கிறார்.

நடிகர், தனுஷுக்கு, விஜயகாந்த், Vijaikanth, dhanush

விஜயகாந்தின் அறிவுரைப்படி தனுஷின் அக்கா மருத்துவக்கல்லூரியில் சேர்கிறார்.
தனுஷின் அக்கா இன்று அப்போலோவில் பெரிய மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். விஜயகாந்தை நன்றியோடு நினைவு கூர்ந்து கஸ்தூரிராஜா பேட்டியில் சொல்கிறார்.

விஜயகாந்த் என்கிற நடிகர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார். அந்த கல்யாண மண்டபம் மட்டும் இடிக்கப்படவில்லையென்றால் அவர் அரசியல் பக்கம் வராமல் சினிமா மட்டும் நடித்துக்கொண்டு நல்ல மனிதராக வலம் வந்திருக்கக்கூடும்.

நடிகர், தனுஷுக்கு, விஜயகாந்த், Vijaikanth, dhanush

எத்தனையோ பேர் சொல்வார்கள். பசிக்கு உணவளித்தார் என்று. ஆனால் ஒரு டாக்டரை இந்த நாட்டுக்கு அளித்திட்ட மனிதத்தன்மையில் எத்தனை உயிர்களை காப்பாற்றுகிறார்.

மருத்துவக்கல்லூரிக்கனவு கனவாகவே போய்விட்டதே என ஒரு அனிதா உயிரிழந்ததை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும்….
விஜயகாந்த்…இளைப்பாறட்டும்….

Related posts

Coincheck To Refund All Customers Affected By Hack, Faced By Community Support

admin

Venezuela Launches Free Cryptocurrency Training Course For Citizens

admin

New Cryptocurrency Debit Card Harnesses AI To Give Customers The Best Deal

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More