சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களின் சொத்து மதிப்பு அதிகமாக தான் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் அதிக அளவிலான சம்பளம் வாங்குவர். நடிகர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிய காலம் கடந்து இப்போது எல்லாம் கோடி கணக்கில் வாங்கி வருகின்றனர்.
அதிலும் நடிகைகள் சொல்லவே வேண்டாம். தற்போது முன்னணி நடிகைகளாக உள்ள அனைவரும் தங்களின் நடிப்பு மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சம்பளத்தை பெறுகின்றனர். அதேபோல் தான் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் தான் Priyanka Mohan.
இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு டான் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இப்போது அவர் ஜெயம் ரவியுடன் இணைந்து JR 30 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தான் தற்போது இவரின் சொத்து (Priyanka Mohan Net Worth) மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்தில் இத்தனை கோடி சொத்து வைத்துள்ளார் என கூறி வருகின்றனர். இப்போது அவரின் சொத்து மதிப்பு பற்றிய விவரத்தை பார்க்கலாம். நடிகை பிரியங்கா மோகன் அவர்களின் சொத்து மதிப்பு (Priyanka Mohan Sothu Mathippu) 17 கோடி என்று கூறப்படுகிறது.
மாதம் 30லட்சம் வரை வருமானம் வாங்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் படம் ஒன்றுக்கு 1.5 கோடி வரை சம்பளமும், விளம்பரத்தில் நடிக்க 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். அதுமட்டுமின்றி இவர் சமீபத்தில் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு மட்டும் 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.