கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
தான் தற்போது நலமாக இருப்பதாகவும், பல உயிர்களைப் பலிவாங்கியுள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். R