ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல ஹீரோயினாக மாறியுள்ளார்.
இந்நிலையில் வீரபாண்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுக்க கூட முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அம்மாவும் என் ஆபிஸுக்கு அடிக்கடி வருவார்”.
“என்னுடைய படத்தில் நீ தான் ஹீரோயின் என்று சொல்லி அவரையே புக் பண்ணேன். என்னுடன் இருக்கிறவர்கள், அந்த பொன்னும் ரொம்ப குண்டாக இருக்கிறார். எதுக்கு இவங்கள ஹீரோயின் ஆக்குறாருன்னு சிலர் பேர் கூறினார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்த முனைப்பு எனக்கு பிடித்து இருந்ததால் அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினேன்”.
“அதன் பின், அவர் வளர்ந்து முன்னணி நடிகையாக மாறியதும் என்னை மறந்துவிட்டார். எப்போதும் வளர்த்தவர்களை அவமதிப்பது என்பது மிக பெரிய துரோகம்” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.