பெண்களை படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் நடிகர் பிரபல வில்லன் நடிகர் தான் மாடல் அழகி ஒருவரை அழைத்ததை ஓப்பனாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லன் விநாயகன்
தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிரு’ போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கவுதம் மேனன் விக்ரம் கூட்டணியின் ‘துருவ நட்சத்திரம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன்.
இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். மேலும், சமீப காலமாக இவர் மீது பல பாலியல் குற்றங்கள் எழுந்து வருகிறது.
உண்மை உடைத்த நடிகர்
இந்நிலையில், இவர் மீது 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றம் ஒன்று எழுந்து பெரிதாக பேசப்பட்டது. அதில் மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் ‘மீடூ’ புகார் கூறியிருந்த நிலையில் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் கொடுத்தார்.
மேலும், அவரது தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடிகர் விநாயகனை கைது செய்தனர். அந்த மாடல் ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு அந்த மாடல் அழகியின் தாயாரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் பாலியல் குற்றங்களை செய்தது குறித்த விவகாரம் எழுந்த நிலையில் இந்த தகவலும் பரவி வருகிறது.