வவுனியா பிரதேசத்தில் தம்பதியரை வெட்டி படுகொலை செய்து 8 பேரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று நேற்று (1) அப்பகுதியிலுள்ள ஏரியொன்றில் இந்தக் கொடூரமான குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் ஐந்து வாள்கள், ஒரு கெட்டிரியா மற்றும் மூன்று இரும்பு குழாய்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் இரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.