பிரபல நடிகர் சரத்குமார் பற்றிய அறிமுகம் தேவையில்லை, தமிழ் ரசிகர்களுக்கு இவர் பரிட்சியமானவரே.
இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். சில தனிப்பட்ட காரணத்தால் சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
அதன் பின் சரத்குமார், பிரபல நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சரத்குமார், முன்னாள் மனைவி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், வரலட்சுமியின் அம்மாவை நான் விவாகரத்து செய்த பின்னரும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளை கலந்துகொண்டார். நாங்கள் பிரிய சில தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகா இருவரும் பழகும் போது சில பிரச்சனைகள் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அந்த நிலைமை மாறிவிட்டது. நான் என்னுடைய மகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.