February 10, 2026
LeoTamil.com
Image default
Cinema news

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி  உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப்  பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

இதேவேளை,  இசைஞானி இளையராஜாவின்  விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.

Ilaiyaraaja Daughter Bhavatharini Passes Away

இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.

அவரது மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். அவர் தற்போது திடீரெனெ மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.

இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்! சினிமா துறையினர் அதிர்ச்சி |

புற்றுநோய்

திருமதி. பவதாரிணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரிணி மறைவு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts

சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்தும் மறுத்து ஒதுக்கிய KPY பாலா!

admin

தமிழக வெற்றி கழகம்: கட்சிப் பெயரை அறிவித்த நடிகர் விஜய்

admin

விஜயகாந்த் மறைவுக்கு விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பகிர்ந்த ஆடியோ..

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More