அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோ.!! கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக இணையத்தில் பரவும் காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜயகாந்திற்காக கண்ணீர் விட்ட விஜய்
தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலும் முக்கிய ஆளுமையாக இருந்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மரணம், ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர் மற்றும் திரைத்துறையினர் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.
நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதா?
நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த வந்த போது கட்டுக்கடங்காத கூட்டம் தேமுதிக தலைமை அலுவலகத்தை சூழ்ந்து இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடிகர் விஜய்யால் காருக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பின் பொலிஸார் மற்றும் பவுன்சர்கள் இணைந்து அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இருப்பினும் சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தனர்.
நடிகர் விஜய் காரில் ஏறச் சென்ற போது, கூட்டத்தில் எங்கிருந்தோ இரண்டு செருப்புகள் விஜயை நோக்கி பறந்து வந்தது. ஒரு செருப்பை விஜய்யின் அருகில் இருந்தவர் தன்னுடைய கைகளால் பிடித்து வந்த திசையிலேயே திருப்பி வீசினார்.
Facebook Video Link — https://fb.watch/pevLWgc7fE/
நல்ல வேளையாக வீசப்பட்ட செருப்பு நடிகர் விஜய் மீது படவில்லை. அதே சமயம் செருப்பை யார் வீசியது என்பது வீடியோகளில் பதிவாகவில்லை.
மேலும் இந்த செருப்புகள் வேண்டுமென்றே வீசப்பட்டதா? அல்லது தவறுதலாக வீசப்பட்டதா? என்று தெரியவில்லை, இருப்பினும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.