February 13, 2025
LeoTamil.com
Image default
Cinema news

நிச்சயதார்த்தம் முடிந்து 4 வருடங்கள், விஜயகாந்த் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்காதது ஏன்?

நிச்சயதார்த்தம் முடிந்து 4 வருடங்கள், விஜயகாந்த் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்காதது ஏன்? உடல்நலக்குறைவால்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், கோடிக்கணக்கான மக்கள் என பலர் சாலையெங்கும் தேங்கி நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் கேப்டனின் உடல்நலக்குறைவால் அப்டியே நின்றுபோனது.

கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க இருந்தார் விஜயபிரபாகரன். மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முயற்சித்த விஜயகாந்த், இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்ததாராம்.

பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு மேலாகியும் இந்த திருமணம் கிடப்பிலே இருக்கிறது. விஜயகாந்தின் நிறைவேற ஆசைகளில் இதுவும் ஒன்று என செய்தி வெளியாகியிருந்தது.

ஆம், விஜயகாந்தின் ஆசையே அவரது இரண்டு மகன்களுக்கும் (விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ) இருவருக்கும் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பது தானாம். ஆனால், இருவரின் திருமணத்தை பார்க்கும் முன்பே அவர் காலமாகிவிட்டார்.

Related posts

53 வயதில் கர்ப்பமான நடிகை ரேகா!! வைரலாகும் புகைப்படம்

admin

அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோ.!!

admin

விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் விஜய்! (Video)

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More