நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார் – சர்ச்சைக்குரிய நடிகையான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இன்று (02) காலை காலமானார்.
1991 மார்ச் 11ஆம் திகதி பிறந்த அவர் மரணிக்கும் போது 32 வயதாகும்.
இந்நிலையில் இன்று காலை பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் காலமானதாக உத்தியோகபூர்வமாக அவரது முகாமையாளர் பதிவிட்டுள்ளார்.
ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த பூனம் பாண்டே, 2011 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றால் நிர்வாணமாக வீடியோ வெளியிடுவேன் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரபலமடைந்தார்.
2012 இல் IPL இல் கொல்கத்தா அணி வென்றால் அரை நிர்வாண வீடியோ வெளியிடுவதாக தெரிவித்து, அதனை அவ்வாறே செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலானார்.
2013 இல் நஷா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்த அவர், தனக்கனெ இணையத்தளமொன்றை ஆரம்பித்து அதில் கட்டணம் செலுத்துபவர்களுக்காக அரை நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு வந்ததார்.
அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை வைத்துள்ள அவர், தனது புகைப்படங்களை வெளியிடுதல் மற்றும் குறித்த இணையத்தளத்தை பிரபலப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட்டு வந்தார்.