சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்தும் மறுத்து ஒதுக்கிய KPY பாலா! மாவீரன் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து பல பிரச்சனைகளுக்கு பின் பொங்கல் அன்று அயலான் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பல பேட்டிகளை கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் KPY பாலா எடுத்த பேட்டியொன்றில், சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளி இண்ட்ரோ கொடுத்திருக்கிறார். பதிலுககு சிவகார்த்திகேயனும் பாலா செய்யும் நல்ல விசயங்களை பாராட்டி அவருக்கும் இண்ட்ரோ கொடுத்திருக்கிறார்.
எனக்கு வாய்ப்பு கொடுக்கும் படி பாலா கேட்க, அயலான் படத்தில் நடிக்க அழைத்தும் நீ வரவில்லை, டான் கனா படத்தில் அழைத்தும் நீ வர மறுவிட்டாய் என்று கூறியிருக்கிறார். அயலான் படத்தில் பேசவே பேசாத கதாபாத்திரம் என்பதால் நடிக்க யோசித்ததாக பாலா கூறியிருக்கிறார்.
நீ வாயை தொறந்தால் மூடமாட்ட, எப்படி அந்த ரோல் செட்டாகும் என்றதற்கு நன்றி அண்ணா என்று பாலா கூறியிருக்கிறார். உடனே சிவகார்த்திகேயன், நான் உன்னை திட்டுகிறேன், பாராட்டவில்லை என்று கூறியிருக்கிறார். கண்டிப்பாக அடுத்த படத்தில் நடிக்க நானே கூப்பிடுகிறேன் என்றும் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.