விஜயகாந்த் மறைவுக்கு விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பகிர்ந்த ஆடியோ.. தமிழ் சினிமாவில் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து பிரபலமானவர் எஸ் ஏ சந்திரசேகர். இப்படம் விஜயகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 57 புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய விஜயகாந்த் அவர் இயக்கத்தில் பல படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.
இதனால் இருவருக்கு நட்பு ஏற்பட்டப்பின் தன் மகன் விஜய்க்கு வாய்ப்பு கேட்டு பேசிய எஸ் ஏ சி, அவரையும் செந்தூரப்பாண்டி படத்தில் நடிக்க வைத்தார் விஜயகாந்த்.
இந்நிலையில், விஜயகாந்த் சமீபகாலமாக உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட விஜய் அவரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
தற்போது கேப்டன் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அவர் மறைவுக்கு விஜய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் எஸ் ஏ சி, சில விசயத்திற்காக குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது தான் விஜயகாந்த் மரணம் பற்றிய செய்தியை அறிந்து எஸ் ஏ சி, ஆடியோ கால் மூலம் ஒரு வீடியோவை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.