April 19, 2025
LeoTamil.com
Image default
Cinema news

விஜயகாந்தின் உடலை விட்டு நகராத ஒரே நடிகர்.. கலங்க வைக்கும் புகைப்படம்.!

விஜயகாந்தின் உடலை விட்டு நகராத ஒரே நடிகர்.. கலங்க வைக்கும் புகைப்படம். மறைந்த கேப்டன் விஜயகாந்த் சினிமா உலகிற்காக செய்த நற்காரியங்கள் ஏராளம். இதனால் அவர் மீது திரையுலகினர் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

நேற்றில் இருந்து திரையுலகை சார்ந்த பலரும் கேப்டன் விஜயகாந்துக்கு செய்யும் கடைசி மரியாதையாக, அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான புதிய இயக்குனர்களையும், நடிகர்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை கேப்டன் விஜயகாந்திற்கு உண்டு. திரைப்பட கல்லூரியில் இருந்து வந்த பலருக்கு ஒளி விளக்காகவே கேப்டன் திகழ்ந்தார்.

விஜயகாந்தின் உடலை விட்டு நகராத ஒரே நடிகர்.. கலங்க வைக்கும் புகைப்படம்.!

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் ஆக்கியதில் கேப்டன் விஜயகாந்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

குறிப்பாக பிற படங்களை காட்டிலும் கேப்டன் விஜயகாந்தின் படங்களில் மன்சூர் அலிகானின் சண்டை காட்சிகள் மிகவும் பிரபலம். கூட்டத்தில் ஒருவராக திகழ்ந்த வரை ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார்.

அந்தப்படத்தில் மன்சூர் அலிகான் வெளிப்படுத்திய வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இதனால் விஜயகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய அன்பும், மரியாதையும் உண்டு. இந்நிலையில் கேப்டனின் மறைவு மன்சூர் அலிகானுக்கு பேரிடியாக அமைந்தது.

இதனையடுத்து காலையிலே விஜயகாந்த் வீட்டுக்கு சென்றவர், அவரது உடல் பக்கத்திலே இருந்தார். அதனை தொடர்ந்து சாலி கிராமத்திற்கு கேப்டனின் உடல் கொண்டு சென்ற சமயத்தில், மன்சூர் அலிகானும் பொது மக்களுடன் சேர்ந்து ஊர்வலமாக சென்றார்.

தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சமும் நகராமல் அங்கயே நொறுங்கி போய் நின்றார் மன்சூர் அலிகான்.

இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கி வைத்தது. மேலும், நன்றியுள்ள மனிதர். கேப்டன் காலடியிலயே கிடக்கார் என்றெல்லாம் மன்சூர் அலிகான் குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Related posts

நடிகை நடத்தும் மசாஜ் சென்டர், பலான மேட்டர்ல சிக்கிய சிவகார்த்திகேயன்

admin

பிரபல நடிகருடன் ஆட்டோவுக்குள் சிக்கிய கீர்த்தி சுரேஷ்.!

admin

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார்

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More