பிரபல நடிகருடன் ஆட்டோவுக்குள் சிக்கிய கீர்த்தி சுரேஷ்.! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ‘இது என்ன மாயம்’ எனும் திரைப்படத்தில் நடித்தார்.
முதல் படம் பெரியளவு வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை நிலை நாட்டினார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் பரப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இவருக்கு ஆண் நண்பருடன் திருமணமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் பரவின.
இதுபோன்ற நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிகர் வருண் தவனுடன் ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் வருண் தவானும், கீர்த்தி சுரேஷ் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.