October 8, 2024
LeoTamil.com
Image default
Cinema news

‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் தற்போது மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் உலகளவில் ஒரே வாரத்தில் 375 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினி, தனது 170வது படத்தில் நடிக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கி புகழ் பெற்ற டி.ஜே ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான ஸ்கிரீன் டெஸ்டிங் பணிகள் சமீபத்தில் நடைப்பெற்றன. இந்த படத்தினை லைகா நிறுவனம் தாயரித்து வழங்க உள்ளது.

இதுதான் டைட்டிலா..?

‘தலைவர் 170’ படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால், இப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே, ‘இந்த’ டை்டில்தான் படத்திற்கு வைக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்தபடி உள்ளது. ரஜினியின் 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

‛ஜெயிலர்’ படத்துக்கு புதிய சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபர மனு!

சந்திரமுகி படத்தில் ‘வேட்டையன்’ ராஜா என்ற கதாப்பாத்திரம் இடம் பெற்றிருக்கும். இதில் அந்த ராஜாவாக ரஜினியே நடித்திருப்பார். இதனால், செண்டிமன்டாக இந்த தலைப்பு அவரது 170வது படத்திற்கு வைக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதான் படத்தின் டைட்டில் என கிட்டத்தட்ட பலதரப்பட்ட சினிமா வட்டாரங்களில் இருந்தும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை நடிகர்களா…

‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சில நடிகர்கள் இதில் நடிப்பது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகிற்கு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், பாலிவுட்டிற்கு அமிதாப் பச்சன்தான் சூப்பர் ஸ்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. இவர்கள் இருவரும் 80 மற்றும் 90களில் வெளியான சில பாலிவுட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்பாேது ரஜினிகாந்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ள தகவல் கசிந்தில் இருந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.
இவர்தான் வில்லனா..?

அமிதாப் பச்சனுக்கும் ரஜினிக்கும் தலைவர் 170 படத்தில் வில்லனாக வரும் நடிகர் குறித்த தகவலும் வெளியானது. சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ரத்னவேல் கதாப்பாத்திரத்தில் நடத்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனவர், பகத் பாசில். மலையாள நடிகரான இவர், ‘வேலைக்காரன்’ படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார்.

மலையாள திரையுலகை பொறுத்தவரை இவர் ‘நடிப்பு அரக்கன்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரை ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

புது நடிகர்..

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியல் பிரபலமானவர் சர்வாணந்த். ரஜினியின் 170 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான ‘கணம்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு தென்னிந்திய திரையுலகில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவருக்கு பதிலாக இவரா..? 

ரஜினியின் 170வது படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான ‘நானி’ நடிப்பதாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர், சமந்தாவுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்து பிரபலமானார். தமிழில் சிவாகர்த்திகேயனுக்கு இருக்கும் மதிப்பு, இவருக்கு தெலுங்கு திரையுலகில் உள்ளது.

சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவருக்கு பதிலாகத்தான் தற்போது சர்வாணந்த் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்

admin

விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் விஜய்! (Video)

admin

பிரபல நடிகருடன் ஆட்டோவுக்குள் சிக்கிய கீர்த்தி சுரேஷ்.!

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More